728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Monday 29 December 2014

    2014 ரீவைண்டிங் சில படங்கள் சில தகவல்கள்

    2014ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் சில படங்கள் சில சிறப்பு தகுதிகளுடன் தனித்து நிற்கிறது. அவற்றில் சில.. .

    நம்ம கிராமம்: தேசிய விருது பெற்ற படம். இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது. மோகன் சர்மா இயக்கியிருந்தார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த சாதிக் கொடுமையை பேசிய படம்.

    அகடம்: ஒரே டேக்கில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற படம். 2 மணிநேரம் 2 நிமிடங்கள் படத்தின் நீளம். முகமது இஷாக் என்பவர் இயக்கி இருந்தார்.

    வீரம்: அஜீத் முதன் முறையாக கிராமத்து கதையில் நடித்தார்.

    ஜில்லா: நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் நடித்த தமிழ் படம்

    பண்ணையாரும் பத்மினியும்: ஒரு காருக்கும், மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை சொன்ன படம். எஸ்.யூ.அருண்குமார் இயக்கி இருந்தார்.

    குக்கூ: முதன் முறையாக பார்வையற்றவர்களின் வாழ்க்கையை அவர்களுக்கு நெருக்கமாக நின்று சொன்ன படம். பத்திரிகையாளர் ராஜு முருகனின் முதல் படம்.

    இனம்: ஒரு படம் திரையிடப்பட்டு பலத்த எதிர்ப்பால் தியேட்டரிலிருந்து திரும்ப பெறப்பட்ட முதல் படம்.

    தெனாலிராமன்: மூன்று வருட வனவாசத்துக்கு பிறகு வடிவேலு நடித்த படம்.

    வாயை மூடி பேசுவோம்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் அறிமுகமான படம்.

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: காமெடியன் சந்தானம் சோலோ ஹீரோவாக நடித்தார்.

    கோச்சடையான்: மோசன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் இந்தியப் படம்.

    அரிமா நம்பி: உலக புகழ்பெற்ற டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

    இராமானுஜன்: கணிதமேதை இராமானுஜரின் வரலாற்று திரைப்படம். சாவித்தி பேரன் அபிநய் ராமானுஜனாக நடித்தார்.

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்: கதையே இல்லாமல் வந்த முதல் படம். பார்த்திபன் இயக்கம்.

    புலிப்பார்வை: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை மையமாக கொண்ட படம்.

    ஆ: 5 விதமான பேய் கதைகளின் தொகுப்பாக வந்த படம்.

    வேல்முருகன் போர்வெல்: காமெடியன் கஞ்சா கருப்பு தயாரிப்பாளர் ஆனார்.

    வடகறி: நீலப்பட நடிகை சன்னி தியோல் நடனம் ஆடினார்.

    முயல்: 60 புகைப்பட கலைஞர்கள் இணைந்து தயாரித்த படம்.

    லிங்கா: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் வாழ்க்கையை தழுவியது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2014 ரீவைண்டிங் சில படங்கள் சில தகவல்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top