கோச்சடையான் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் தயாரித்தது.
இப்படத்திற்காக எக்ஸிம் வங்கியில் இந்நிறுவனம், 20 கோடி ரூபாய் கடன் வாங்கியது.
வாங்கிய கடனுக்காக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள குடும்ப சொத்தான 2.13 ஏக்கர் நிலத்தை காட்டி கேரண்டராக கையெழுத்து போட்டிருந்தார்.
தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி தராததால், உத்தரவாதம் தந்த லதா ரஜினிகாந்தின் சொத்துக்கள் ஏலம் விடப்போவதாக அறிக்கை வந்துள்ளது.
இது குறித்து மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எக்ஸிம் வங்கியில் இருந்து வாங்கிய 20 கோடி ரூபாய் கடனை வங்கியுள்ளோம்.
தங்களது சொந்த திறன் மற்றும் தொழில் அடிப்படையிலேயே மேற்படி கடன் வங்கியுள்ளது, வருகிற 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
0 comments:
Post a Comment