இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘வெளிநாட்டு தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றார் என்று கூறுவது தவறு. தொடர்ச்சியாக விளையாடுவதால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமை அதிகம். அதனால் இதுவே சரியான நேரம் என்று கருதி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினோம். ‘நெருக்கடி காரணமாகத்தான் இந்த முடிவுக்கு வந்தீர்களே என்றால், தயவு செய்து முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். புது ஆண்டு வரை (2015) தொடர்ந்து கேப்டனாக நீங்கள் இருப்பீர்கள் என்று உறுதி அளிக்கிறோம்’ என்று கூட சொல்லி பார்த்தேன். ஆனால் அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்று விட்டாலும் அவரால் 2019–ம் ஆண்டு வரை தொடர்ந்து சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என்பது எனது கணிப்பாகும்’ என்றார்.
Friday, 2 January 2015
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment