728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, 11 January 2015

    முஸ்லிம் மதத்துக்கு மாறிய நடிகை மோனிகா திருமணம் இன்று நடந்தது

    முஸ்லிம் மதத்துக்கு மாறிய நடிகை மோனிகா திருமணம் சென்னையில் இன்று நடந்தது. மோனிகா அவசர போலீஸ் 100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என் ஆசை மச்சான் படத்தில் ‘கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்’ என்ற பாடலுக்கு குழந்தை நட்சத்திரமாக வருவார். 

    இதுபோல் இந்திரா படத்திலும் ‘நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது’ பாடலில் வந்தார். அழகி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பகவதி, சண்டக்கோழி, சிலந்தி, குறும்புக்கார பசங்க, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

    தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மோனிகா திடீரென முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் ரகீமா என மாற்றிக் கொண்டார். மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். 

    மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் மதத்துக்கு மாறிய நடிகை மோனிகா திருமணம் இன்று நடந்தது Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top