728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, 6 January 2015

    டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் என இருந்ததை உறுப்பினர் என மாற்றி கொண்ட தோனி

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில்  ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர், இந்திய அணிக்கு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்று தந்த மகத்தான கேப்டன் என்ற பெருமை இவருக்கு உண்டு.

    ஒரு நாள் போட்டிகளில் அடித்து நொறுக்கும் டோனி, நிலைத்து நின்று பொறுமை காட்ட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவர் அல்ல என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழும். சமீபகாலமாக இந்த விமர்சனங்கள் அதிகமாகின. டெஸ்ட் கேப்டன்ஷிப்பை டோனி, விராட் கோலியிடம் வழங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் அதை டோனி கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில்  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய தோனி, பிரிவு உபச்சாரவிழாவுக்கு பொருத்தமானவராக விளங்கினாலும், அமைதியாக முன்னறிவிப்பின்றி அவர் ஓய்வு பெற்றது அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்தது.

    டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதன் மூலம் அவரது 9 ஆண்டுகால சர்வதெச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

     90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 144 இன்னிங்சில் 4876 ரன்களை எடுத்துள்ளார். அவரது அதிகட்ச ஸ்கோர் 224 ஆகும். 6 சதங்களையும் 33 அரை சதங்களையும் தோனி அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 38.09 ஆகும். விக்கெட் கீப்பராக 256 கேட்ச்களையும் 38 ஸ்டம்பிங்களையும் அவர் செய்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். டெஸ்ட்  போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து அவர் விளையாடுவார்.

    அதிக அளவு பாலோவர்களை கொண்டுள்ள தோனி தனது டுவீட்டர் பக்கத்தில் கேப்டன் இந்திய அணி எனறு இருந்ததை உறுப்பினர் இந்திய அணி என மாற்றி கொண்டார்.இதன் மூலம் தான் ஒரு ஜெண்டில் மேன் என்பதை மீண்டும்  நிருபித்து உள்ளார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் என இருந்ததை உறுப்பினர் என மாற்றி கொண்ட தோனி Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top