728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Monday, 19 January 2015

    ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு 50 சதவீத சம்பளம் அபராதம் - ஐசிசி அறிவிப்பு


    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரோகித் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வார்னருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

    நேற்றைய போட்டியின் 23வது ஓவரில் பால்க்னர் வீசிய கடைசிப் பந்தை ரோஹித் சர்மா அடித்தார், அந்த பந்து வார்னரிடம் சென்றது. அவர் அதை எடுத்து விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினை நோக்கி வீசினார். ரோகித் சர்மாவின் காலுக்குள் நுழைந்து சென்ற பந்தை பிடிக்க ஹாடின் தவறியதால் பந்து நழுவி ஓடியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா ஒரு ரன் ஓடினார்.

    ரோகித் சர்மாவின் கால்களில் பட்டு பந்து சென்றதாக தவறாக நினைத்த வார்னர், அவர் ரன் எடுத்ததை கண்டு கோபமடைந்தார். இதனால் அந்த ஓவரின் முடிவில் சர்மாவிடம் போய் கோபமாக எதையோ கூறினார். பதிலுக்கு ரோஹித் சர்மாவும் பேசினார். அப்போது அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நடுவர்களும் ஆஸ்திரேலியா கேப்டனும் குறுக்கிட்டு வார்னரை அமைதிப்படுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த வார்னர் கூறுகையில் ”ரோகித் சர்மா என்னிடம் இந்தியில் பேசினார். நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னேன்” மற்றபடி நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு 50 சதவீத சம்பளம் அபராதம் - ஐசிசி அறிவிப்பு Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top