ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் வழங்குவதாக கூறி போலி பிரசாதம் விற்று வந்த மேற்கு வங்க பிரமுகர் ஒருவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர். பல்வேறு மோசடிகளில் தற்போது கோயில் பெயரில் பக்தர்ககளை ஏமாற்றி மோசடி நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. கேரள போலீசாருக்கு ஒரு புகார் வந்தது. ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் விற்கப்படுவது உண்மை தானா என விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் உயர் அதிகாரி பிரகாஷ், டி.ஐ.ஜி., விஜயகுமார், ஆகியோர் தலைமையில் போலீஸ் படை விசாரித்தது.
மே.வங்கத்தை சேர்ந்தவர்; இந்த விசாரணையில் ' ஆன்லைன் பிரசாதம் டாட்காம்'- என்ற பெயரில் வெப்சைட் நடத்துவது தெரியவந்தது. இந்த அலுவலகம் பெங்களூரு ஓல்டு ஏர்போர்ட்ரோட்டில் , இருப்பது தெரிந்தது. இங்கு விரைந்த போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த போலி பிரசாதம் மற்றும் சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டன.
மேற்கு வங்கம் ராஞ்சல் மாவட்டம் ஊஞ்சல்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் இந்த போலி பிராசாத நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஐ. டி., இஞ்சினியரான அவரை பிடிக்க போலீஸ் படையினர் மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.
மீனாட்சி அம்மன், பழநி பிரசாதம் : சபரிமலை பிரசாதத்தை பிரதானமாக விற்று வந்த அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி முருகன் கோயில் என 51 பிரபல கோயில்கள் பிரசாதம் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். சபரி மலை பிரசாதத்தில் ஒருபாக்கெட், அப்பம், விபூதி, குங்குமம், கொண்ட பாக்கெட் விலை 501 , 1500 , 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார்.
இது குறித்து திருவதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரிகளிடம் கேட்ட போது சபரிமலை பிரசாதத்தை ஆன்லைனில் வழங்கிட யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை, என கூறினர்
0 comments:
Post a Comment