குளிர்காலம் வந்தால் எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ, அதே அளவில் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திப்போம். ஏனென்றால் இந்த காலத்தில் தலை முதல் கால் வரை பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். அதில் ஒன்று தான் தலைமுடிப் பிரச்சனை. இத்தகைய தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க, குளிர்காலத்தில் கூந்தலுக்கு போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
இங்கு குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், கூந்தலை ஆரோக்கியமாக பிரச்சனையின்றி வைத்துக் கொள்ளலாம்.
1. வாழைப்பழத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் முடியை நீரில் அலசி, இந்த கலவையை தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசவும்.
2. முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது மயோனைஸ் மற்றும் பேரிக்காய் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முடிக்கு தடவி, பின் ஒரு பிளாஸ்டிக் கவரால் தலையைச் சுற்றி, சுடுநீரில் நனைத்து பிழிந்த துண்டை தலை மேல் போர்த்தி 25 நிமிடம் ஊற வைத்து, பின் அலசவும்.
3. தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, இரவில் தூங்கும் முன் தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து, காலையில் எழுந்து மைல்டு ஷாம்புவால் தலையை அலச வேண்டும்.
4. ஒரு பௌலில் 5 ஸ்பூன் தயிருடன் இரண்டு ஸ்பூன் வெந்தயப் பவுடரை சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி 25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
5. வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால் கூந்தலானது பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இருக்கும்.
6. ஒரு பௌலில் எலுமிச்சைப் பழச்சாற்றோடு, ஆலிவ் ஆயில் மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு அலசினால், முடியானது எண்ணெய் பசையோடு இருப்பதோடு, பட்டுப்போல் மின்னும்.
0 comments:
Post a Comment