இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே வெள்ளை முடி என்னும் நரை முடியானது வந்துவிடுகிறது. பொதுவாக வெள்ளை முடி வந்தாலே வயதாகிவிட்டது என்று தான் எண்ணுவோம். அதனால் பலருக்கு திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு ஒருசில காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால், இளமையிலேயே நரைமுடி வருவதைத் தடுக்க முடியும்.
இங்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்பதுடன், அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்றும் பார்ப்போம்.
* வெள்ளை முடி வருவதற்கு முதல் காரணம், மன அழுத்தம் தான். தற்போது அதிகப்படியான வேலைப்பளுவால் பலர் அதிக அளவில் டென்சன் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இப்படி டென்சன் மற்றும் மன அழுத்தம் அதிகம் இருந்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டால், வெள்ளை முடி வருவதைத் தடுக்கலாம்.
* உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் நரைமுடி வந்துவிடும். அதிலும் இக்காலத்தில் டயட்டில் இருக்கிறேன் என்று பட்டினியுடன் இருந்து, உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் வெள்ளை முடியை பரிசாகப் பெறுகின்றனர்.
* ஆய்வு ஒன்றில் தலையில் பொடுகு அதிகம் இருந்தாலும் முடியானது சீக்கிரம் நரைத்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பொடுகு அதிகம் இருந்தால், ஹென்னா பவுடருடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளித்து வர வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், பொடுகு காணாமல் போய்விடும்.
* கூந்தலுக்கு கருமை நிறத்தை வழங்கும் மெலனின் அளவை அதிகரிக்க காப்பர் என்னும் சத்து மிகவும் இன்றியமையாதது. இந்த காப்பர் சத்து குறைவாக இருந்தாலும், முடியானது நரைக்க ஆரம்பிக்கும். இந்த காப்பர் சத்தானது நண்டு மற்றும் காளானில் அதிகம் உள்ளது.
0 comments:
Post a Comment