இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ என்ற பேய் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நிக்கிகல்ராணி, சிருஷ்டிடாஸ்கே நடித்துள்ளனர். கே.இ.ஞானவேல்ராஜா, அல்லு அரவிந்த் இணைந்து நடித்துள்ளனர். சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. ‘டார்லிங்’ படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:–
தாடி வளர்த்திருந்த என்னை ஞானவேல்ராஜா பார்த்து டார்லிங் படத்துக்கு பொருத்தமான கேரக்டர் என்று சொல்லி இதில் நடிக்க வைத்துவிட்டார். அது மிகவும் பிடித்தது. வெயில் படத்துக்கு பிறகு தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்தேன். இப்போது நடிக்கவும் வந்துள்ளேன். தொடர்ந்து நடிக்கவும் செய்வேன். இசையமைக்கவும் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா கூறும்போது, அட்டகத்தி படத்தை வாங்கியபோது நிறையபேர் இந்த படத்தை ஏன் வாங்கினீர்கள் என்றனர். ஆனால் அந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேல் நம்பிக்கை வைத்து வாங்கி ரிலீஸ் செய்தேன். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ‘டார்லிங்’ படத்தை தயாரித்து இருக்கிறேன். இதுவும் தரமான படம். குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும்.
தமிழகத்தில் பேய் படங்கள் நன்றாக ஓடுகின்றன. ‘டார்லிங்’ தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கை விட பத்து மடங்கு சிறப்பாக தமிழில் தயாராகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சாம் ஆண்டன் உள்ளிட்டோர் கடினமாக உழைத்து 83 நாளில் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
கருணாஸ், பாலா, நான் கடவுள் ராஜேந்திரன் கேரக்டர்களும் சிறப்பாக வந்துள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். பொங்கலுக்கு 175 தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது. நிக்கிகல்ராணி பேயாக வருகிறார் என்றார்.
கருணாஸ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், டிரீம் பேக்டரி சக்திவேலன் ஆகியோரும் பேசினர்.
0 comments:
Post a Comment