இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய திரைத் துறையினர் எவருமே இந்த முறை ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
'மில்லியன் டாலர் ஆர்ம்' திரைப்படத்தில் இருந்து மூன்று பாடல்களும், 'தி ஹன்ட்ரட்-ஃபூட் ஜார்னி' திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலும் சிறந்த பாடல்கள் இசையமைப்புக்கான பிரிவிலும், கோச்சடையான் படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான பிரிவிலும் என நான்கு பரிந்துரைக்கான ஆஸ்கர் தெரிவிப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெற்றிந்தது. ஆனால், ஆஸ்கர் பரிந்துரையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இடம் ஏதும் கிடைக்கவில்லை.
முன்னதாக, ஏ.ஆர். ரஹ்மான் 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்துக்காக இரண்டு விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் தவிர, இந்திய இசையமைப்பாளர்கள் சோனு நிகாம் மற்றும் பெக்ராம் கோஷ் ஆகியோரது பெயர்கள், 'ஜல்' (இந்தி) எனும் இந்திய திரைப்படத்துக்காக, ஆஸ்கர் பரிந்துரைத் தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இப்படமும் சிறந்த படத்துக்கான பரிந்துரைத் தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
தகுதிப் பிரிவில் நினைவுகூரப்படும் தயாரிப்புகளுக்கான ஒரு பிரிவில், 'ஜல்' (இந்தி), திரைப்படத்துடன் 'தாகா' (இந்தி), 'கபாஸ் கொண்டையாச்சி கோஷ்டா' (மராத்தி), 'கோச்சடையான்' (தமிழ்), 'மினுகுருலு '(தெலுங்கு), 'யாங்கிஸ்தான்' (இந்தி) ஆகிய இந்தியத் திரைப்படங்கள் ஆரம்பச்சுற்றுத் தேர்வில் இடம்பெற்றன. இந்தப் பிரிவில் மட்டும் உலகம் முழுவதிலுமிருந்து 323 படங்கள் இடம்பெற்றன. அதேநேரத்தில் இதிலிருந்து இறுதிச் சுற்றில் எட்டுப் படங்கள் மட்டுமே தேர்வுபெற்றன.
'லையர்ஸ் டைஸ்' (இந்தி) படம் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் ஆரம்பச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் தேர்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்பை (இந்தியா) இழந்தது.
உலகின் பலமொழிகளிலும் வந்து கலந்துகொண்ட ஆரம்பச் சுற்றில் தேர்வாகி இறுதிச் சுற்றில் 83 படங்கள் வெளியேற, 9 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
0 comments:
Post a Comment