728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Saturday 10 January 2015

    “S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்……


    முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.

    இறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.
    பூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.

    வாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்…… Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top