728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, 20 January 2015

    இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு


    இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8-ந் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்று உள்ளார்.

    தேர்தலில் தோல்வியடைவது உறுதி என அறிந்ததும், ராணுவத்தின் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எண்ணியதாக ராஜபக்சே மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக புதிய அரசு விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில் அலரி மாளிகை எனப்படும் அதிபர் மாளிகையில் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதில் இலங்கை ரூபாய் நோட்டுகளும், பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

    இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற பணமே இவ்வளவு என்றால், எவ்வளவு அதிகமான தொகையை எடுத்துச்சென்றிருக்கக்கூடும்? என அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே ராஜபக்சே குடும்பத்தினர் அரசின் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி பணத்தில், தற்போது வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதாக தெரிய வந்து உள்ளது.

    இதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் சுமார் ரூ.13 ஆயிரம் கோடியை அபகரித்து இருப்பது தெரிய வந்து உள்ளது என்றும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை மந்திரியாக இருந்த ராஜபக்சே எவ்வித ஆவணமும் இன்றி இந்த பணத்தை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிதி மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top