728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday 6 January 2015

    பழங்கால இந்தியாவில் விமானங்கள் இருந்ததாக அறிவியல் மாநாட்டில் வெளியான தகவலால் சர்ச்சை

    மும்பை,

    102-வது இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் இன்று நடந்தது. பன்னாட்டு அறிவியல் அறிஞர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பழங்கால இந்தியாவில் விமானங்கள் இருந்ததாக கேப்டன் ஆனந்த் போடாஸ் பேசியது பலரது புருவத்தை உயரச் செய்தது.

    பழங்கால இந்திய அறிவியல் பற்றி கேப்டன் ஆனந்த் போடாஸ் பேசியவை பின்வருமாறு:-

    நமது இந்தியாவில் பழங்காலத்தில் யோகிகளும், முனிவர்களும் விமானங்களை கண்டுபிடித்திருந்தார்கள். அன்றைய விமானங்கள் ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு செல்லும் அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருந்தது. அந்த விமானத்தை காற்றில் நடுவழியில் அப்படியே நிறுத்தி மிதக்க செய்ய முடிந்தது. எந்த திசைக்கும் திருப்பி பறக்க செய்யயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. விமான கண்டுபிடிப்பில் அதிகாரபூர்வ வரலாறு மற்றும் அதிகாரபூர்வமற்ற வரலாறு என இரண்டு வரலாறு இருக்கிறது. 1903-ல் முதல் விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்தது அதிகாரபூர்வ வரலாறு. இந்த தகவல்கள் 'வைமானிகா பிரகாரணம்' என்ற பழங்கால கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலப்போக்கில் அந்த அறிவியல் கோட்பாடுகள் எல்லாம் மறைந்து  விட்டன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கேப்டன் போடஸின் அரைமணி நேர பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசா ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அவரது பேச்சில் அறிவியலோடு புராண கட்டுக்கதைகளும் கலந்துள்ளதால் அவை மக்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் என ஆன்லைனில் பெட்டிசன் போட்டுள்ளனர்.

    ஆனால், இதை மறுத்துள்ள மத்திய மந்திரி ஜவடேகர் பண்டைய இந்திய அறிவியல் கோட்பாடுகள் லாஜிக்கானவை. அவை உடனடியாக புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளன. அந்த விஞ்ஞான அறிவை நாம் மதிக்க வேண்டும். என்று வலியுறுத்தினார்.

    இந்திய அறிவியல் மாநாட்டு வரலாற்றிலேயே 'சமஸ்கிருதத்தில் பழங்கால விஞ்ஞானங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இதுவே முதன்முறை. பழங்கால இந்தியாவின் தாவர ஆராய்ச்சி, யோகக்கலை, பழங்கால இந்திய வேதங்களில் விமானத்தை பற்றிய தொழில்நுட்பம் மற்றும் பழங்கால அறுவை சிகிச்சை முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேச 8 பேச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பழங்கால இந்தியாவில் விமானங்கள் இருந்ததாக அறிவியல் மாநாட்டில் வெளியான தகவலால் சர்ச்சை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top