அன்றாடம் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. இந்த தலைவலி அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையே. தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி சிலருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவில் வரும். அப்போது பலர் மாத்திரைகளை போடுவார்கள்.
இப்படி எதற்கு எடுத்தாலும் மாத்திரைகளை போட்டு வந்தால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் நம் முன்னோர்கள் பின்பற்றிய பாட்டி வைத்தியங்களை மேற்கொண்டு வந்தால், பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் தலைவலியை போக்கலாம்.இங்கு தலைவலியைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இஞ்சி இரத்த நாளங்களில் உள்ள காயங்களை போக்கி தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு இஞ்சி டீ போட்டு குடித்தால், தலைவலியானது உடனே நீங்கும்.
* புதினாவில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி புரூரிடிக் தன்மை இருப்பதோடு, இதில் மெத்தனால் மற்றும் மென்தான் போன்ற பொருட்களும் இருப்பதால், இவை தலைவலியில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும். அதற்கு புதினா சாற்றினை நெற்றியில் தடவவோ அல்லது அதன் நறுமணத்தை நுகரவோ வேண்டும்.
* டென்சனால் வந்த தலைவலியைப் போக்க துளசி பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் துளசி இறுக்கமடைந்த தசைகளை தளரச் செய்யும். ஆகவே தலைவலிக்கும் போது துளசி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* லாவெண்டர் எண்ணெயின் நறுமணத்தாலும் தலைவலி நீங்கும். உங்களுக்கு அடிக்கடி தலைவலித்தால், சுடுநீரில் சிறிது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்கவும். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
* கிராம்பு கூட தலைவலிக்கு உடனடி நிவாரணம் தரும். அதற்கு சிறிது கிராம்பை தட்டி, அதனை நுகர்ந்து பார்க்க வேண்டும். இதனால் அதன் நறுமணத்தால், தலைவலி குறையும்.
0 comments:
Post a Comment