728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Friday 9 January 2015

    அஸ்வின் அரைசதம்: இந்தியா 475 ரன்களுக்கு ஆட்டமிழந்தது


    சிட்னி டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாளான இன்று இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இன்று காலை 342/5 என்று தொடங்கிய இந்திய அணி கோலி விக்கெட்டை 147 ரன்களுக்கு இழந்தது. ரியான் ஹேரிஸ் பந்தை அவர் பிளிக் செய்ய முயன்றார். ஆனால் தரையோடு ஆடாததால் அது ஷாட் மிட்விக்கெட்டில் ராஜர்ஸ் கையில் கேட்ச் ஆனது.

    இவரும் விருத்திமான் சாஹாவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர். 

    விருத்திமான் சாஹா 35 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தில் ஸ்மித் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு அஸ்வினும், புவனேஷ் குமாரும் சேர்ந்தனர். 

    புவனேஷ் குமார் முதலில் திணறினார். அதாவது 36 பந்துகளில் 1 ரன்னையே பெற முடிந்தது. ஆனால் அதன் பிறகு அவர் 75 பந்துகளைச் சந்த்தித்து 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தார். அஸ்வினுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 65 ரன்கள் சேர்க்கப்பட்டது.

    குமார் 30 ரன்களில் லயனிடம் அவுட் ஆகி வெளியேறினார். மொகமது ஷமி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, உமேஷ் யாதவ், 4 ரன்களில் ரியான் ஹேரிஸிடம் வீழ்ந்தார்.

    அஸ்வின் அபாரமாக விளையாடி 50 ரன்களை எடுத்தார். 111 பந்துகளில் அவர் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 9-வது விக்கெட்டாக வீழ்ந்தார். 

    இந்தியா 475 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் முன்னிலை பெற்றது.

    சற்று முன் வரை ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்சில் வார்னர் (4) விக்கெட்டை, அஸ்வினிடம் இழந்து 38 ரன்கள் எடுத்துள்ளது. புவனேஷுடன் அஸ்வின் தொடக்கத்தில் புதிய பந்தில் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    வாட்சன் 13 ரன்களுடனும், ராஜர்ஸ் 21 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஸ்வின் அரைசதம்: இந்தியா 475 ரன்களுக்கு ஆட்டமிழந்தது Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top