இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர், இந்திய அணிக்கு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்று தந்த மகத்தான கேப்டன் என்ற பெருமை இவருக்கு உண்டு.
ஒரு நாள் போட்டிகளில் அடித்து நொறுக்கும் டோனி, நிலைத்து நின்று பொறுமை காட்ட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவர் அல்ல என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழும். சமீபகாலமாக இந்த விமர்சனங்கள் அதிகமாகின. டெஸ்ட் கேப்டன்ஷிப்பை டோனி, விராட் கோலியிடம் வழங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் அதை டோனி கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய தோனி, பிரிவு உபச்சாரவிழாவுக்கு பொருத்தமானவராக விளங்கினாலும், அமைதியாக முன்னறிவிப்பின்றி அவர் ஓய்வு பெற்றது அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்தது.
வழக்கமாக ஒரு போட்டியில் வென்றால், அந்த போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டம்பு ஒன்றை நினைவுபொருளாக எடுத்துச்செல்வதை வாடிக்கையாக கொண்டவர் தோனி. ஆனால், மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெல்லவில்லை என்றாலும், போட்டி முடிந்ததும் ஒரு ஸ்டம்பை எடுத்து சென்றார். டிரா ஆன போட்டி ஒன்றில் ஸ்டம்பை எடுத்து செல்வது தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.இதிலிருந்து ஓய்வு எடுக்கும் முடிவை அப்போது எடுத்துவிட்டார் என்று தெரிகிறது.
போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலிய வீரர்களுடன், சகஜமாக பேசிய தோனி எந்த நிலையிலும் தான் ஓய்வு பெற போகிறோம் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. ஓய்வு பெறும் நாளில் எந்த ஒரு சிறப்பு மரியாதையும் , எழுந்து நின்ற கைத்தட்டல்களையும் பெறாமல் மிகுந்த அமைதியாக அன்றைய தினம் சென்றுவிட்டார். இது ”மகி ( தோனியின் செல்லப்பெயர்) வழி” என்று அழைக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment