நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகை குஷ்பு தனது பட ஆடியோ விளையாட்டு விழாவில் ருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்து கழுத்தில் அணிந்திருந்தார். இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் வெளியானது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. குஷ்புவின் இத்தகைய செயல் இந்து மதத்தையும், ருத்ராட்சத்தையும் களங்கப்படுத்துவதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தாலி சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு.
என்னுடைய தாலியை யாருக்கும் காட்டவேண்டிய அவசியமில்லை: குஷ்பு

0 comments:
Post a Comment