728x90 google

Thursday, 8 January 2015

மனித மூளை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

மனித மூளை மர்மங்கள் நிறைந்த யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. மனிதனின் செயல், எண்ணம், சொல் ஆகியவற்றை இயக்கும் மூளைப் பற்றிய சில தகவல்கள் அனைவரையும் அதிசய பட வைக்கும் படி உள்ளது. அந்த வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் மூளைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்தன. 
இப்போது அந்த ஆய்வில் வெளிவந்த மனித மூளைப் பற்றிய சில அதிசய தகவல்கள் பற்றிப் பார்ப்போம்

இரவில் தூங்கும் போது உடலின் அனைத்து உறுப்புக்களும் அமைதியாக சுறுசுறுப்பின்றி இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் மூளையானது இரவில் தான் சுறுசுறுப்புடன் செயல்படும். மூளை மட்டும் தான் கனவு கண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி தூங்குவதே இல்லை. 
* மூளையின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதிலும் பெரிய அளவு மூளை கொண்டவர்கள் தீர்வு காண்பதில் மிகவும் வல்லவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
* பெண்களை விட ஆண்கள் தான் மூளையை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா? ஆம், பிரச்சனைகள் வரும் போது பெண்கள் அதற்கு தீர்வு காணும் நேரத்தில் மூளையை அதிகம் பயன்படுத்தாமல் தடுமாறுகிறார்கள் என்றும், ஆண்கள் அந்நேரத்தில் நன்கு மூளையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் பெண்கள் ஆண்களை விட 10 சதவீதம் குறைவாக மூளையைப் பயன்படுத்துகிறார்கள்.

* உடலிலேயே மூளை தான் அதிக அளவில் ஆற்றலை உட்கொள்கிறது. ஆம், மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு அதிக அளவில் ஆற்றல் தேவை. 
* உடலின் அனைத்து உறுப்புக்களிலும் வலியை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் மூளை வலிக்கிறது என்பதை மட்டும் நேரடியாக உணர்ந்திருக்கமாட்டீர்கள். அதற்கு முக்கிய காரணம், மூளையில் வலி கிரகிப்பான்கள் எதுவும் இல்லை. 
* மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும். இதை பலரால் நம்ப முடியாது. ஏன், நம் விஞ்ஞானிகளால் கூட இதனை முழுமையான புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் நாம் தூங்கும் போது கனவில் காணும் சில விஷயங்கள் உண்மையில் கூட நடக்கும். இதற்கு காரணம் நம் மூளையில் உள்ள டோபமைன் அமைப்பு தான். இது இதுவரை நடக்காத சம்பவங்களைப் பற்றி சில அறிகுறிகளை அளிக்கும். இதன் மூலம் வருங்காலத்தை கணிக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மனித மூளை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் Rating: 5 Reviewed By: Unknown