728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Monday 19 January 2015

    இவர் ரொம்ப நல்லவர்: உலக கோப்பைக்கு இன்னும் 26 நாட்கள்



    உலக கோப்பை அரங்கில், வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வால்ஷ் ‘ஜென்டில்மேனாக' போற்றப்படுகிறார். இதற்கு உதாரணமாக கடந்த 1987ல் லாகூரில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியை குறிப்பிடலாம். இதில், வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 49.3 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.       பின் சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி வால்ஷ் ‘வேகத்தில்’ ஆட்டம் கண்டது. பரபரப்பான கடைசி ஓவரை இவரே வீசினார். கடைசி பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, சலீம் ஜாபர் ‘கிரீசை' விட்டு நீண்ட தூரம் வெளியே நின்றார். இதனை கவனித்த வால்ஷ், அவரை ரன் அவுட்டாக்கி இருக்கலாம். ஆனால், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட இவர், முறைத்து மட்டும் பார்த்தார். ‘பெயில்சை' தகர்க்கவில்லை. இதனை பயன்படுத்திய பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்' வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை  இழந்தது. ஆனாலும், வால்ஷின் பெருந்தன்மையான செயல், கிரிக்கெட் நிபுணர்களால் பாராட்டப்பட்டது.        உலக கோப்பை வரலாற்றில், அதிக போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்தின் பிளமிங். இவர் 26 போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இவர் ரொம்ப நல்லவர்: உலக கோப்பைக்கு இன்னும் 26 நாட்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top