728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, 8 January 2015

    கண்கள் அடிக்கடி துடிப்பதற்கான காரணங்கள்

    சிலருக்கு கண்கள் அடிக்கடி துடிக்கும். அப்படி கண்கள் துடித்தால் நல்லது என்று நினைக்கின்றனர். ஏனெனில் அது பற்றி ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அதில் ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்பதாகும். 
    ஆனால் இது உண்மையல்ல முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை. ஆம், ஏனெனில் கண்களானது துடித்தால், உடலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். இதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

    கண்கள் எதற்கு அடிக்கடி துடிக்கின்றது என்பதற்கான காரணங்கள்:
    * மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால், கண்களானது துடிக்கும். 
    * சரியான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்கள் துடிக்கும். 
    *  நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்றவற்றைப் பார்த்து கண்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுத்தால், கண்கள் அதிகம் துடிக்கும்.
    * காப்ஃபைன் அதிகம் நிறைந்த பொருட்களான காபி, டீ போன்றவற்றை அதிகம் பருகினால், கண்கள் துடிக்கும். 
    * மதுவை அதிகம் அருந்துவோருக்கும் கண்களானது அடிக்கடி துடிக்கும். 
    * ஆய்வுகள் பலவற்றில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், தசைகளானது துடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், கண்கள் துடிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 
    * உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கண்களானது வறட்சி அடைந்து துடிக்கும். 
    * கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்கள் அடிக்கடி துடிப்பதற்கான காரணங்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top