728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Friday 2 January 2015

    நோய்கள் ஜாக்கிரதை:பால் எனும் விஷம்

    பொடுசுகள் முதல் பெருசுகள் வரை, 'பால் குடித்தால் நல்லது' என்று நினைக்கின்றனர். ஆனால், 'பால் குடித்தால் நோய் வரும்' என்று, யாராவது நினைத்ததுண்டா?
    ஒரு நாளில், அளவுக்கு அதிகமாக பால் எடுத்துக் கொள்ளும்போது, உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும். உதாரணத்திற்கு, அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும்போது, குமட்டல் வரும். இதற்கு காரணம், பாலில் உள்ள 'லாக்டோஸ்' எனும் வேதிப்பொருள். 'லாக்டோஸ் இன்டாலரன்ஸ்' இருப்பவர்கள், பால் அல்லது பால்பொருட்களை உண்ட பின், செரிமான மண்டலத்தில், பிரச்னைகளானது ஆரம்பமாகி விடும். இதனால், குமட்டல், வாந்தி, தலைவலியோடு, மார்பு பகுதியில், விவரிக்க முடியாத தொந்தரவு ஏற்படும்.
    மேலும், பெருங்குடலில் 'லாக்டோஸ்' சரியாக செரிமானமாகாமல், அப்படியே சிறுகுடலுக்குள் சென்று விடும். இதனால் எடை குறைவு, கடுமையான வயிற்றுவலி மற்றும் மலத்தில் ரத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
    குழந்தைகளை பொறுத்தவரை பாலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற உணவுகளுக்கு கொடுப்பதில்லை; ஆனால், பாலில் இரும்புச்சத்து குறைவு! இதை விரும்பி குடிக்கும் குழந்தைகள், வயிறு நிறைந்து மற்ற உணவுகளை தவிர்ப்பார்கள். இதனால், அவர்களின் உடலில் ரத்த அணுக்களின் அளவு குறைந்து, ரத்தசோகை வரக்கூடும்; தொடர்ந்து, மூச்சு திணறல் பிரச்னையும் ஏற்படும்!
    இவைதவிர, சிலருக்கு மாட்டுப்பால், அலர்ஜியை ஏற்படுத்தும். காரணம், அதில் உள்ள மோசமான புரோட்டின்! இதனுடன், நோய் எதிர்ப்பு மண்டலமானது எதிர்த்துப் போராடும்போது, உடலில் பல்வேறு அலர்ஜிகள் ஏற்படும்.
    எல்லாவற்றையும் விட, அதிக பாலுக்காக மாடுகளுக்கு போடப்படும் ஊசிகளால், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் நிச்சயம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நோய்கள் ஜாக்கிரதை:பால் எனும் விஷம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top