கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் , நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’.
படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் தினம் என அறிவிக்கப்பட்டு பிறகு ஜனவரி 29 என மாற்றப்பட்டுள்ளது. படத்தில் இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதும் ,மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் வேலைகளும் சற்று மீதம் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
எல்லாவற்றிற்கும் மேல் படத்தின் இந்த வேலைகள் அனைத்தும் முடிந்து இனிதான் சென்சார் பார்வைக்கு செல்லவிருக்கிறது.எனவே கண்டிப்பாக இதற்கு இன்னும் சில நாட்கள் தேவை என்பதாலும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமான மனநிலை தான் என்றே கூறலாம். இந்நிலையில் சில ரசிகர்கள் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டை அவர்களே கட் அவுட்டுகள் அமைத்து சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
0 comments:
Post a Comment