அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது.
ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி.
அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர்.
இதனைக் கூட மோடி வெளிநாட்டு தலைவர் ஒருவரைப் பார்த்து காப்பிடி அடித்தார் என்று கூடவே கமெண்ட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment