நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘டூரிங் டாக்கீஸ்‘ படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. அதில் அவர் பேசியதாவது:
பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர் பிளாட்பாரத்தில் படுத்திருந்த நான் 7 நாள் உணவு இல்லாமல் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பட்டினியாக கிடந்திருக்கிறேன். கஷ்டப்பட்டு திரையுலகிற்கு வந்தேன். நிறைய புதுமுகங்களை நான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன். என் மகன் விஜய்யை நடிகனாக அறிமுகம் செய்து வைக்க அந்த நேரத்தில் இருந்த பெரிய இயக்குனர்களை அணுகினேன். மொத்த செலவையும் நானே ஏற்கிறேன் என்று கூறியும் யாரும் அறிமுகப்படுத்த முன்வரவில்லை.
பிறகு நானே தயாரிப்பாளர், இயக்குனர் பொறுப்பை ஏற்று விஜய்யை அறிமுகப்படுத்தினேன்.என் மகன் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தாலும் நான் இன்னும் சிறுபட்ஜெட் படங்கள்தான் தயாரிக்கிறேன். என் மனதுக்கு நெருக்கமான கதையை ‘டூரிங் டாக்கீஸ்‘ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். சில்மிஷத்துடன் கூடிய 75 வயது தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறேன். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். இது நான் இயக்கும் கடைசி தமிழ் படம். இவ்வாறு எஸ்.ஏ.சந்திர சேகர் கூறினார். தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

0 comments:
Post a Comment