இலங்கயின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மைத்ரிபாலா சிறிசேனவுக்கு பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல், அமைதியான முறையிலும், வெற்றிகரமாகவும் நடைபெற உறுதுணையாக இருந்த இலங்கை மக்களை அமெரிக்க மக்களின் சார்பில் வாழ்த்துவதாக கூறியுள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல், ஜனநாயகத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கை உடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்த தருணத்தில் அமெரிக்கா முனைப்பு கொண்டுள்ளதாகவும் பராக் ஒபாமா தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துரிதமாக செயல்பட்டு ஆட்சி மாற்றத்திற்கு முறையாக வழிவகுத்த ராஜபட்சவை பாராட்டுவதாகவும் ஓபாமா குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment